நிழல்களைத் துரத்தி சலித்த மணிகண்டன்
வெம்மையான பரப்புகளில் புதைந்து கொள்ள இடம் தேடியலைகிறான்
நகரத்தில் வீழ்த்தப்பட்ட ஓணானென மல்லாந்திருக்கும் குணா சிறுநீரில் விந்து கலந்திடா பால்யத்திற்குத் திரும்புகிறான்
தேவதையின் மடிகள் களவு போன வன்மத்தில் சுந்தரராமசாமி ரசிகைகளை தேடிக் கொல்கிறான் சுகுணாதிவாகர்
சிதறுண்ட பிணங்களைக் குறிப்பெடுத்து ஓய்ந்த தமிழ்நதி யசோதரையின் பஞ்சனை கண்ணீருக்கு பதில் கேட்டு புத்தரை வம்புக்கிழுக்கிறாள்
அடர்கானகங்களில் நீலியை புணர புலியின் குறிகளை வேண்டி மிருக நினைவுகளில் நிகழ் தொலைக்கிறான் அய்யனார்
சிட்டுக்குருவிகளை பிரசவிக்க முடியாது போன துக்கத்தில் கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி அடுத்த கதவுகளை நோக்கி நகர்கிறாள் நிவேதா
காயத்ரியின் பொங்குதல்கள் லக்ஷ்மியின் விரலிடுக்குகளில் வழிகிறது
எல்லாருக்கும் முதுகு காட்டி தனியே அமர்கிறாள் சந்திரமதி

மதி மதி வளரும் மதி வளரா மதி என உளறி கொட்டியபடி உள்ளே குதிக்கிறதொரு ஓடுகாலி
பைத்தியமாகிறது தமிழ்பரப்பு