இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா? Print E-mail
அறிவியல் பார்வை   

"ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா?"


இப்படி ஒரு கேள்வி ஐ. டி நிறுவன நிர்வாகிகளிடம் இருந்து குறிப்பாக இன்போசிஸ் நிர்வாகிகளிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது, தொழிற்சங்கம் என்பது பல தியாகங்களைச் செய்து பெறப்பட்ட உரிமை, ஒருவரோ அல்லது அதிகமானவரோ இந்த உரிமை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்குப் பொருந்தும் அல்லது பொருந்தாது என்று கூறுவதற்கில்லை. அப்படி இருக்க, இவர்கள் ஐ.டி தொழிலில் யூனியன் என்றதும் ஏன் பதறுகிறார்கள்? காரணம் இல்லாமலில்லை, இந்தியாவில் முகாமிட்டுள்ள பல்வேறு ஐ.டி கம்பெனிகள் எவவளவு நாள் நிலைத்திருக்கும் என்பது கேள்விக்குறியே..


கம்பெனியின் நிலை தன்மையே கேள்விக்குறி எனும் போது தொழிலாளர் நிலை...


கம்பெனி மூட்டை கட்டும் போது தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பற்றிக் கேள்வியெழுப்பிவிட்டால் ....


அதுவும், யூனியன் என்ற பேரில் கூட்டமாக சேர்ந்து கேள்வி யெழுப்பி விட்டால்.....இப்படி பல கேள்விகளை அவர்களுக்குள் எழுப்பிப் பார்த்துத்தான் யூனியனா வேண்டவே வேண்டாம் என்று பதறுகின்றனர், யூனியனாகக் கட்டமைய விடாமல் சித்து வேலையெல்லாம் செய்கிறார்கள்.


கை நிறைய சம்பளம், போக்குவரத்துக்கு வசதி. சோர்வை கலைத்து உற்சாகம் கூட்ட காபி, டீ, மென்பானம் (இன்னும் சில இடத்தில் பீர்) அத்தோடு நில்லாமல் வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ உல்லாச சுற்றுலா என "இவையெல்லாம் எத்தனை நாளைக்கு" என்று மனதில் கேள்வியெழும் வாய்ப்பே இல்லாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறார்கள்.


ஆயுத பூஜைக்கு முதலாளியாகப் பார்த்து கவரில் போட்டு தரும் இனாமுக்கும் உரிமையுடன் பேசி, பெரும் போனஸ் பணத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.


இனாம் என்ற நினைவுடனே ஐ.டி நிர்வாகம் அளிப்பவற்றை ஊழியர்கள் பெற வேண்டும்,அஃது அவர்களின் உரிமையென்ற புரிதலெல்லாம் வந்து விட கூடாது. யூனியன் அவர்களின் உரிமைகளை புரிய வைத்துவிடும் எனவே தான் எதிர்க்கிறார்கள்.


யூனியன் அவசியம் ஊழியருக்கு புரிய வேண்டும்.. நல்ல யூனியன் தலைமையை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

 

http://ariviyalpaarvai.blogspot.com/2007/07/blog-post_5958.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)