விவாகரத்து வழக்குகள் பல காலம் மன உளைச்சலை தரக்கூடியன, புதிது புதிதாய் வரும் குழப்பங்கள், குழந்தையை யார் பொறுப்பாக பார்த்து கொள்வது, எப்படி சேமிப்பு, கடன் இவற்றை பகிர்ந்து கொள்வது என்ற காரணங்கள், மனைவி மீதோ அல்லது கணவன் மீதோ வெறுப்பு இருந்தாலும் மனதுக்கு பிடித்த மற்ற உறவுகளை எப்படி பிரிவது, குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டி உறவின் தொடர்பை எப்படி வரையறுப்பது என்ற எல்லா கேள்விகளும் வரும். கடைசியாக வந்த புள்ளியியல்(அமெரிக்க மத்திய அரசின் புள்ளீயியல் கணக்கு) படி ஒரு சிக்கல் இல்லாத விவாகரத்து வழக்கு முடிய 1 முதல் இரண்டு வருடங்கள் ஆகும்.
விவாகரத்துக்கு பிறகு 380,000 பெண்கள் தங்கள் முன்னாள் கணவர்களாலும், 52,000 ஆண்கள் தங்கள் முன்னாள் மனைவியராலும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். எந்த ஒரு விவாகரத்து வழக்கு முடிந்தபின்னும் ஆணோ பெண்னோ வருந்தாமல் இருந்ததில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் முன்னாள் துணைமீது பழி சுமப்பதைவிட தன் மீதே அதிக தவறிருப்பதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியாகவும் I am a looser என்ற மனப்பான்மையோடு வருந்துவதாகவும் உளவியலார்கள் சொல்கிறார்கள்.
விவாகரத்து மத, இன கட்டுப்பாடுகளாலும் வேறுபடுவதை இங்கே காணலாம்.
விவாகரத்து பொதுவாக மூவகைப்படும். 1. இரண்டு பேரும் மனம் ஒப்பி விவாகரத்து பெறுவது. இவ்வகையில் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழவும், மறுமணம் செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக மனம் ஒப்பி செய்துகொள்ளும் விவாகரத்துகள் குறைவு. அப்படியே செய்துகொண்டாலும் பொருளாதார காரணங்கள் அதை கட்டுப்படுதுகின்றன. இவ்வகை விவாகரத்துகளுக்கு ஏதேனும் அந்த மாநிலம் ஒப்புக்கொள்ள கூடிய காரணங்கள் இருந்தால் போதுமானது. இங்கே யார் மீது தவறு என்பதைவிட, இந்த திருமணம் ரத்தாக வேண்டும் என்பதே நோக்கம்.
சில முக்கிய காரணங்கள்: இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை (கணவன், மனைவி வேறு ஊர்களில் வசிப்பது), தவிர்க்க முடியாத பிரச்சினைகள், தீர்த்துவைக்க முடியாத மன வருத்தங்கல் போன்றவை காரணமாகும். இவ்வகை விவாகரத்துகள் பெற்றுக்கொள்ள இருவரும் சில காலம் தனித்து வாழவேண்டும். இது மாநிலங்களிடையே வேறுபடும். நியுஜெர்சியில் 18 மாதங்கள் பிரிந்து வாழ வேண்டும். ஏதேனும் மனம் ஒப்புகொள்ள கூடிய காரணம் வேண்டும். உதாரணமாக முன்பொருமுறை வலையில் பதிந்திருந்த வழக்கொன்றில், பெண் விவாகரத்து கோரியதன் முக்கிய காரணம், மாமானாரின் அத்துமீறல்கள். ஆனால் அது எங்கேயும் வழக்காக பதிந்திருக்கவில்லை, எனவே அதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரண்டு வழக்கறிஞர்களும் சொன்னபின், கணவனின் வன்முறையை காரணம் காட்ட விரும்பினாள். ஆனால், அதைக் கணவன் ஒப்புக்கொள்ளவில்லை. தான் வன்முறையோடு ஒரு பெண்ணை நடத்தியதாக நிரூபணம் இல்லாமல் ஒரு சட்ட ஆவணத்தில் போடுவதை ஆண் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு/ ஆணுக்கு திருமணத்தை மீறிய உறவிருப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. கடைசியாக இருவரும் ஒப்புக்கொண்ட ஒரு காரணம், குழந்தைகளை வளர்க்கும் முறையில் பேதம் இருப்பதாக. இந்த காரணமே அவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்றால், வெளியே அன்ரு ரத்து செய்யப்பட்ட திருமணங்களும் அவற்றீற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சின்ன சின்ன காரணங்கள் விவாகரத்துக்கு ஆதாரமாக சொல்லப்படுவது இது போல, எப்படியாவது அதிக பாதிப்பு இல்லாமல் திருமண ஒப்பந்தம் ரத்தானால் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுபவையே ஆகும்.
இவ்வகை விவாகரத்துகள் வழக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்களும் எப்படியாவது வழக்கு முடிந்தால் சரி என்று இருவரையும் அழைத்து நிபந்தனைகள், யார் குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற விவகாரங்களை கூடுமானவரை தீர்க்க முயலுகிறார்கள்.
சில மாநிலங்களில் பிரிந்திருக்கும் காலம் கூடுதலாக இருக்குமேயானால், கணவனும் மனைவியும் பேசி எப்படியாவது ஒரு தவறு இருப்பதாக சொல்லி குற்றமுள்ள விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துகொள்கிறார்கள். இதிலும் உண்மையில்லை. இவ்வகை colludingம் சாத்தியமே. குழந்தைகளின் பொறுப்பை பெற பெற்றோர்கள் செய்யும் முயற்சிகள் இன்னும் வியப்பை தரவல்லன. இதில் குழந்தைகளை கருவியாக , பணயமாக, பொருளாக பயன்படுத்துவது அதிர்ச்சியை தரும். அதைப்பற்றி விரிவாக பிறகு. வயதுவந்த குழந்தைகள் பெற்றோரை பயன்படுத்துவதும் உண்டு.
உறவில் விரிசல் வந்தபின் குழந்தைகளுக்கு வழக்குகள், மன வருத்தங்கள் இன்னும் அதிக துன்பத்தை தரலாம் என்பதை தடுக்க இவ்வழியும் கையாளப்படும். ஆனால் இதில் சில சமயம் ஒருவர் தடம் மாறி , இன்னொருவரே ஒப்பு கொண்டுவிட்டார், ஆகவே நான் எந்த சலுகையும் தரமுடியாது என்று சொல்லவும் வழி இருக்கிறது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மனம் உவந்து ஒப்புக்கொள்ளும் விவாகரத்தில் பலவகை ஒபந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். வழக்கறிஞர்கல் இடைபட்டு பேசி, இவற்றை ஏற்பாடு செய்வார்.
http://reallogic.org/thenthuli/?p=235
சட்ட சிக்கல்கள், தவறுள்ள விவாகரத்து (at fault divorce), முடிவான விவாகரத்து (summary divorce)பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்



