வியாழக் கிழமை
மாலை 4 மணி போல் மகேந்திரன்.பெ போன் செய்து இன்று இரவு சந்திக்கலாமா என்றார், சரி சந்திப்போம் அபி அப்பாவும் அவர் இருக்கும் அல்கூஸ் (அவர் தங்கி இருக்கும் இடம்) வர சொல்லி இருக்கிறார், நீங்க என் ஆபிஸ்க்கு மாலை 7 மணிக்கு வந்தால் நாம் இருவரும் அங்கு செல்வோம் என்று "பிளான்" செஞ்சு மகி சரியாக 9.45 க்கு வந்தார், 8 மணிக்கு வண்டி அனுப்புகிறேன் என்று சொல்லிய அபி அப்பா சரியாக 7.59 க்கு போன் செய்து நீங்க இரண்டு பேரும் ஒரு டேக்ஸியில் வந்து விடுங்க காலையில் இங்கிருந்து மின்னலை பார்க்க போகலாம் என்றார். அடிக்கடி தம்பி போன் செய்து அபி அப்பாவை நம்பி போகிறாயா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்றார்.
ஒரு வழியாக என் ஆபிஸ் காரிலேயே அபி அப்பா இருக்கும் இடம் அடைய 10.15 ஆனது. அவர் காத்திருந்து எங்களை அழைத்து சென்றார், பின் சாப்பிட்டு விட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து மூன்று பேரும் பேசினோம், பல முறை "HOT" ஆனா விவாதங்கள் நடந்தது இது இப்ப முடியாது போல இருக்கு என்று நான் ஒரு இரண்டு மணி போல் கிளம்ப முயன்ற பொழுது வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொளுத்துவோம் என்றார்கள், முதல் அதிர்சி இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தது மாநாட்டிலா என்று. பின் ஒரு வழியாக 3 மணிக்கு நான் போய் படுத்தேன், இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று . இப்படியாக முதல் வலைப்பதிவர் (????) முடிந்தது.
வெள்ளி கிழமை
காலை சரியாக 7 மணிக்கு எழுந்து அபி அப்பாவை தேடினால் அபி அப்பா மாநாடு நடந்த இடத்திலேயே ரொம்ப டயர்ட் ஆகி படுத்து இருந்தார். போய் எழுப்பினால் குசும்பன் எப்ப வந்திங்க என்றார்(??? அவர நான் எழுப்ப பட்ட பாடு இருக்கே அத எழுதனும் என்றால் மூன்று பக்கம் ஆகும்). பின் ஒரு வழியாக எல்லாரும் வந்து புறப்பட மணி 11 மணி ஆகி விட்டது , பின் அங்கிருந்து அனைவரும் மின்னுது மின்னல் இருக்கும் அல் அலைன் போய் சேருவதற்குள் மணி 1 ஆகி விட்டது.
அங்கு மின்னல் வேலை செய்யும் fun city சென்றோம், மின்னல் லேசாக ஆட்டம் கண்டார் ஏன் ஏன்றால் போய் இறங்கியது 14 பேர். அனைவரையும் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்று முழு கோழி(கவிதாயினிக்கு கொடுக்கு) ஒன்றை சாதத்தில் புதைத்து வைத்து அவர் அன்பை அதில் போட்டு கலக்கி ஒரு விருந்து கொடுத்தார். (இது வரை நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு!!!)
சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோம்.
மின்னல் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை எங்களை எல்லாம் ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றார்.அப்பயே எனக்கு மாப்பு வைக்க போறான் ஆப்பு என்று தம்பியிடம் சென்னேன். உள்ளே போனால் உறை பணி விளாயாட்டு மைதானம் நாம எல்லாம் எங்க ஊர்லேயே கோடை காலத்தில் வாக்கிங்கும் குளிர் காலத்தில் ஸ்கேட்டிங்கும் போன ஆள் அதானால் சும்மா தில்லாக ஸ்கேட்டிங் டூல்ஸ் கேட்டால் அங்கு இருந்தவன் என் ஷூவை பிடுங்கி வைத்து கொண்டு கீழே இரும்பு பட்டை வைத்த ஷூவைக் கொடுத்தான்.

கால்ல மாட்டிக்கிட்டு போய் மைதானத்தில் இறங்கினால் "டமார்" என்று சத்தம் என்னடான்னு பார்த்தா நான் கீழே விழுந்து கிடக்கிறேன்.சரி எழுந்திருக்கிலாம் என்று முயற்சி செய்து முயற்சி செய்து ரொம்ப டையர்ட் ஆகி அப்பா முடியல மின்னல் ஏம்பா இப்படி செஞ்சிட்ட என்றால் நீ எட்டு போட என்னை ஏன் கூப்பிட்ட அதுக்கு தான் என்றார். எங்க இதுல ஒரு எட்டு போடு குசும்பா என்கிறார், நானே தவழ்ந்து கிட்டு இருக்கேன் என்ன போய்!!! உன்ன 8 போட கூப்பிட்டதுக்காக காதலன்ல பிரபு தேவாவுக்கு ஐஸ் படுக்கை போல என்னை வச்சுட்டியே என்று சொல்லி முடிக்ககிறதுக்குள் டமால் டமால் டமால்.... கோபி, அபி அப்பா, சென்சி எல்லாம் அப்பதான் நம்ம பொசிசனுக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு இரண்டு மணி நேரம் எழுந்து நிற்க போராடி போராடி "பாடி டோட்டல் டேமேஜ்" சரி எல்லாம் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைய பற்றி பேசினார்கள். ஆக முதன் முதலில் ஐஸ் கட்டியில் படுத்து, உட்கார்ந்து கொண்டு மாநாடு நடத்திய பெருமையை அமீரகம் தட்டி செல்கிறது.
மின்னல் ஒரு சின்ன பையனை கூப்பிட்டு இவருக்கு எப்படி ஸ்கேட்டிங் போகனும் என்று சொல்லிகுடேன் என்றார் அவன் முதல்ல எழுந்து இவன ஒரு நிமிசம் நிற்க சொல் மிச்சத்த அப்புறம் பார்கலாம், இவனுக்கு சொல்லி கொடுக்க முடியாது என்னையும் சேர்த்து தள்ளி விட்டுவிடுவான் என்றான். உடம்பு தான் டேமேஜ் என்றால் என் இமேஜயும் டோட்டல் டேமேஜ்.
(அவன் தான் இவன்)
அடுத்து ஒரு ராட்டினத்துக்கு அழைச்சுக்கிட்டு போனார் ஏற்கனவே சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி...முடியல மின்னல் இருய்யா என்று சொன்னால். ஒரு ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டார் வீக்கம் குறைந்து, லேசா வலியும் குறைந்தது. இதுக்கு பேர் தான் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறது போல...
அடுத்து ஒரு கூண்டுக்கு அழைச்சிக்கிட்டு போனார். போய் உட்காந்ததும் அது சுத்த ஆரம்பிச்சு பாருங்க அம்மே...சொம்புக்குள் ஒரு கல்லை போட்டு உண்டியல் குலுக்கவது போல் குலுக்கி எடுத்துச்சு இறங்கி கெத்தா ஆங் இன்னொரு ரவுண்ட் போகலாமா என்று சொல்ல நான் பட்ட பாடு. யப்பா கண்ண கட்டிடுச்சு.
எல்லாருக்கும் ஆரத்தி தட்டு தான் சுத்துவாங்க ஆனா இவரு டிபிரண்டா, ஆரத்தி தட்டுல உட்கார வச்சி இப்படி பத்து சுத்து அப்படி பத்து சுத்து சுத்தி நிப்பாட்ட போகும்பொழுது என்னமோ போய் அந்த ஆப்ரேட்டர் கிட்ட காதில் கிசு கிசுத்தார்... அடிச்சான் பாருங்க அடுத்து இன்னொரு 20 சுத்து...எல்லாம் கலங்கி போச்சு..அப்புறமா அவன் கிட்ட போய் என்னய்யா சொன்னார் மின்னல் என்றால் ..எல்லாம் எனக்கு வேண்டியவுங்க நல்லா "கவனி" என்று சொன்னார் என்றான்..மின்னல் அம்புட்டு நல்லனாய்யா நீ...
இப்படி எல்லாரையும் நன்றாக கவனித்து பதிவர் சந்திப்பை சிறப்பு செய்த மின்னலை தனியாக எல்லாரும் வாழ்த்தினோம்.
அப்பொழுது கோபி மாயவரம் சந்திப்பை பற்றி சொல்ல நான் ரொம்ப மிஸ் செஞ்சுட்டேன் என்று பீல் செய்வதை பார்த்த அபி அப்பா,அங்கு சந்திப்புக்கு வந்த கண்மணி அக்கா, முத்துலெச்சுமி அக்கா, காயத்ரி பாட்டி, ஜெயந்தி, ராம் எல்லோருக்கும் டிக்கெட், விசா எடுத்து வந்து உனக்காக இங்கு ஒரு மாநாடு நடத்துகிறேன் குசும்பா கவலை படாதே என்றார். ஆகையால் சம்பந்த பட்டவர் அனைவரும் அபி அப்பாவுக்கு பாஸ்போர் காப்பி அனுப்பும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
மாலை புறப்படும் முன்பு முத்துகுமரன் போன் செய்து விசாரித்தார். காலையில் மங்கை அக்காவிடம் போனில் சந்திப்பு பற்றிய விவரங்களை சென்ஷியும், அபி அப்பாவும் சொன்னார்கள்.
இப்படியாக பல நல்ல விசயங்கள் பேசி (அது தனிப்பதிவு) முடிவுக்கு வந்தோம்.
ஏ ஏ எல்லாம் பாத்துக்குங்க பாத்துக்குங்க பாத்துக்குங்க நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் மாநாட்டுக்கு(????) எல்லாம் போய் வந்து இருக்கிறேன்.
சந்தித்தவர்கள்
அபி அப்பா, மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர்.



