|
சு. க்ருபா ஷங்கர்
|
ஒரு வலைத்தள அடிப்படையிலான மென்பொருளை வடிவமைக்க, ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு ஒவ்வொரு வரியாக நிரல் எழுதி முடிப்பதை விட ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஒரு திட்டப்படி ஆரம்பித்து எழுதி முடிப்பது சுலபமாக இருக்கும். ஒரு மென்பொருளில் தேவைப்படும் குறிப்பிட்ட அம்சம், ஏற்கனவே எழுதிய மென்பொருளிலும் இருந்திருக்கலாம். அல்லது வேறு யாரோ எழுதிய மென்பொருளில் இருந்திருக்கலாம். அதே போல வடிவமைப்பிலும் அனைத்து மென்பொருட்களுக்கும் பொதுவான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியும். இப்படி அடிக்கடி தேவைப்படும் அம்சங்களுக்கு மறுபடி மறுபடி நிரல் வரிகள் எழுதுவதையும், பொதுவான கட்டமைப்புக்கு மீண்டும் மீண்டும் திட்டமிடுவதையும் தவிர்க்க, framework என்ற ஒன்றைப் பயன்படுத்தலாம்.
இப்படிப்பட்ட ஃப்ரேம்வொர்க்கில், நிறைய விதமான கட்டுமான வகைகள் இருக்கின்றன. கட்டுமான வகை (architectural pattern) என்பது பயனருக்கு எதைக் காண்பிக்கிறோம், எப்படி காண்பிக்கிறோம், மற்றும் எப்படி பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைச் சார்ந்ததாகும். இதில் தற்பொழுது மிகவும் ப்ரபலமாக இருப்பது MVC எனப்படும் மாடல்-வ்யூ-கண்ட்ரோலர் என்ற கட்டுமான வகை. இதில், பயனர் லேயருக்கான நிரல்வரிகளும், அதை ப்ராசஸ் செய்யும் நிரலும் வெவ்வேறு லேயர்களில் இருக்கும். பயனருக்கான லேயரும் கூட இரு வகையாகப் பிரிக்கப்பட்டு, பயனர் உள்ளிடும்/பார்க்கும் லேயர் மற்றும் உள்ளிட்ட தகவலைப் புரிந்து கொண்டு அதை ப்ராசஸ் லேயருக்கு அனுப்பும் லேயர் என்று இரு வகையாக இருக்கும். இதை முறையே view மற்றும் control லேயர் என்று கூறலாம்.
ரூபி ஆன் ரெய்ல்ஸ் என்பது இப்பொழுது மிகவும் ப்ரபலமாக இருக்கும் ஒரு ஃப்ரேம்வொர்க். அதாவது, இந்த கட்டுமானம் ரூபி என்ற மொழியைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கின்றது. இதே போல வேறு பல ப்ரபலமான மொழிகளுக்கும் ஃப்ரேம்வொர்க் இருக்கிறது. ஜாவாவுக்கு www.opensails.org/, டாட்நெட்டிற்கு http://www.castleproject.org/monorail/index.html என்று விதம்விதமாக இருக்கின்றன.
இதில் ஓப்பன் ஸ்னெய்ல்சுடன் எனக்குப் பரிச்சயம் இல்லை. மோனோரெய்ல்சுடன் தனிப்பட்ட முறையில் (அதாவது எந்த ஒரு live projectக்க்கும் பயன்படுத்தாத) பரிச்சயம் இருக்கிறது.
ரூபி ப்ரபலமானதற்குக் காரணமே இந்த ரெய்ல்ஸ் ஃப்ரேம்வொர்க்தான். இதர மொழிகளில் இன்னும் ரெய்ல்ஸ் ப்ரபலமாகாததற்கு எனக்குத் தோன்றும் இரண்டு காரணங்கள்:
- ரெய்ல்சை விட வேறு நல்ல ஃப்ரேம் வொர்க்கள் அந்தந்த மொழிகளில் இருக்கலாம்.
- எந்த ஒரு கட்டுமான அடிப்படையிலான மென்பொருளையும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பயன்படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம்
http://blog.krupashankar.com/pullivalai/archive/2007/07/28/29.aspx
|