இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பிரேசிலியக் காட்டு விமானமும் சில படிப்பினைகளும்... Print E-mail
அற்புதன்   




பிரேசிலிய அடர் கானகத்தில் இருந்து 'எம்பிரயர்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விமானங்களே 'கானக விமானங்கள்' (jungle jets) என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.பிரேசில் ஒரு வளர்முக நாடு, வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் இருக்கும் ஒரு நாடு.ஆனால் அதன் ஏற்றுமதிகளில் இன்று முதன்மை வகிப்பது இந்த விமானங்களே.காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடு பட்ட நாள் முதலாக கோப்பியே அதன் பிரதான ஏற்றுமதிப் பண்டமாக இருந்தது.ஆனால் , 2005 ஆம் ஆண்டு எம்பிரயரின் மொத்த வருவாய் 3.680 பில்லியான் அமெரிக்க டொலர்கள்.2006 ஆம் ஆண்டில் பதியப்பட்ட விற்பனை 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.உலகில் விமான உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் அது போயிங் ,ஏயார்பஸ்சுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தை வகிக்கிறது.இன்று அதில் 20,000 பேர் வேலை செய்கிறார்கள்.ஆனால் அதனோடு தொடர்புடைய ஏனய நிறுவனங்களில் இன்னும் பல்லாயிரம் பேர் வரையிலானோர் வேலை செய்கிறார்கள்.இன்று அது உற்பத்தி செய்யும் விமானங்கள் உலகெங்கும் வெகு வேகமாக விற்பனையாகிக் கொண்டு வருகின்றன.





வெறும் பயணர் விமானங்களில் மட்டும் தங்கியிராது இராணுவ விமானங்கள்,வியாபாரிகள் பாவிக்கும் தனி நபர் விமானங்கள்,இராணுவச் சரக்கு விமானங்கள் என்று அது அதன் எல்லைகளை விரிவாக்கி வருகிறது.


இந்த அதிசயிக்கத் தக்க வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆயிற்று, என்பதே வேலை விடயமாக நான் சா பாலோவிற்க்குச்(Sau Paulo) சென்றிருந்த சமயம் என் மனதில் எழுந்த வினாவாக இருந்தது.அங்கு வேலை செய்யும் மேலாளர் முதல் கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர் வரை ,தமது சாதனை பற்றிய பெருமிதம் முகத்தில் தெரிந்தது.எம்மால் எதுவும் முடியும் என்கிற தன் நம்பிக்கை அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் தெரிந்தது.ஆனால் இந்தச் சாதனைகள் திடீரென உருவாகவில்லை.
தூர நோக்கிலான அடித்தளங்கள் 1940 ஆம் ஆண்டளவிலேயே போடப்பட்டு விட்டன. Brazilian General Command for Aerospace Technology (Comando-Geral de Tecnologia Aerospacial - CTA) அதாவது வான்விண்ணியல் தொழில் நுட்பத்திற்கான பிரேசிலிய பொதுத் தலமையகம்,பிரேசிலிய விமானப் படையின் கீழ் அமைக்கப்பட்டது.அதன் கீழ் பல உயர் தொழில்னுடப்ப வளாகங்களும், ஆராச்சி நிறுவனங்களும் அமைக்கப்பட்டன.தேசியப் பாதுகாப்பிற்கான தொழில் நுட்பங்களை உள் வாங்குவதுவும் சுயமாகவே உருவாக்குவதுமே அன்றைய நிலையில் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதன் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட தொழில் நுட்ப்பங்களை தொழிற்துறை ரீதியாக பிரயோகிப்பதற்காக IPD - Instituto de Pesquisas e Desenvolvimento (Research and Development Institute), ஆராய்வுக்கும் அபிவிரித்திக்குமான நிறுவனம் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனம் சுயமாக பல விமான வடிவமைப்பு முயற்ச்சிகளில் ஈடுபட்டது.Max Holste. என்னும் பிரன்ச்சு பொறியியலாளரும் Ozires Silva என்னும் பிரேசிலியப் பொறியியலாளர் தலமையிலான குழுவினரும் சேர்ந்து வடிவமைத்த IPD-6504, or Bandeirante என்னும் விமானமே பிரேசிலின் முதல் முழு விமான வடிவமைப்பாகவும் அதன் பின்னால் வடிவமைக்கப்பட இருக்கும் விமானங்களுக்குமான அடிப்படையாகவும் இருந்தது.இந்த விமானம் முதன் முதலாக October 26, 1968 ஆம் ஆண்டு தனது முதல் பறப்பை மேற் கொண்டது.இருந்தும் மூலதனப் பற்றாக் குறையினால் இந்த வகை விமானங்கள் பெருமளவில் உற்பத்தி



செய்யப்படவில்லை.இதனை நிவர்த்தி செய்யும் வகையில் July 29, 1969, ஆம் ஆண்டு பிரேசிலிய அரசினால் எம்ப்ரயர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. முதல் உருவாக்கப்பட்ட பண்டராந்தி விமானங்கள் பிரெசிலின் விமானப் படையால் வாங்கபட்டன,படிப்படியாக விற்பனை வளர்ச்சி அடைந்து மொத்தமாக 500 வரையிலான பண்டாராந்தி விமானங்கள் 36 நாடுகளால் வாங்கப்பட்டன.பின்னர் பல்வேறு வகையான விமானங்கள் கூட்டு முயற்ச்சிகளினால் உருவாக்கப்பட்டன.

பிரேசிலின் அரசியலில் நிகழ்ந்த பல ஆட்சிக் கவிழ்ப்புக்கள்,அமெரிக்க அரசின் ஆதரவிலான இராணுவ ஆட்சி மற்றும் வேறு நிதி நெருக்கடிகளினால் அரச நிறுவனமான எம்பிரியர் பாதிப்புக்கு உள்ளானது.1994 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் எம்ரயர் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக ஆக்கப்பட்டது. சில மேற்குலக விமான உதிரிப்பாக உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ERJ 145 என்னும் குறுந்தூர பயணர் விமானம் வடிவமைக்கப்பட்டது.2006 ஆம் ஆண்டு வரையில் 900 விமானங்கள் விற்கப்பட்டன.அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர் அமெரிக்ககவின் பல விமான நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானார்கள்.அமெரிக்கர்கள் பெரிய விமானங்களையும் விமான நிலயங்களளயும் தவிர்த்தனர்.பெரிய விமான நிறுவனங்கள் பல போயிங், ஏயார்பஸ் போன்ற பெரிய விமானங்களை வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டனர்.குறைந்த செலவை உடைய ரீஜினல் ஜெட்களை சேவையில் ஈடுபடுத்தினர்.ஏறக் குறைய இந்த நேரத்தில் தான் எம்ப்ரயரின் ERJ 145 விற்பனை சூடு பிடித்தது.ஆனால் இது ஒரு நிரந்தரமான தேவையாக இருக்காது என்பதை உணர்ந்த எம்ப்ரயர் நிறுவனம் அதன் அடுத்த வடிவமைப்பைத் துவக்கியது.






E-Jets Series என்று Embraer 170, 175, 190 , 195 என்னும் விமானங்களை வடைவமைத்தது.இவை 70-110 வரையிலான இருக்கைகளைக் கொண்ட பெரிய விமானங்கள்(அதாவது எம்ப்ரயர் இது நாள் வரை உருவாக்கிய விமானங்களுடன் ஒப்பிடுகையில்).இதன் மூலம் எம்ப்ரயர் போயிங் ஏயார்பஸ் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் B737 மற்றும் A320 விமானங்களின் சந்தையில் நேரடியாகப் போட்டியில் இறங்கியது.




தரமான வடிமைபைக் கொண்டவையாகவும் விலையில் குறைவானவை ஆகவும் இவை இருப்பதால் இந்த வகை விமானங்கள் வெகுவாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கானக விமானம் எமக்குத் தரும் படிப்பினைகள் என்ன?


தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு தூர நோக்கிலான தொழில்னுட்ப அடித் தளங்கள் எந்தளவிற்க்கு இப்போதே அவசியம் என்பதனையும், விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அபிவிரித்திக்கும்,வளர்ச்சிக்கும் இன்றியமையாதன என்பதையும் உணர்த்துகின்றது அல்லவா? வெற்றுக் கோசங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் அப்பால் நிறுவனப்படுத்தப்பட்ட ஆய்வுகளும்,தொழில்னுட்ப உள்வாங்கலுக்கான ஒருங்கிணைப்பும் நீண்டகால நோக்கிலான தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கும் மனித வள மேம்பாட்டுக்கும் இன்றி அமையதனவையாக இருக்கின்றன.

உசாத் துணை மற்றும் படங்கள் : விக்கிபீடியா ,எம்ப்ரயர் இணயத் தளங்கள்.
(ஏன் ஒன்றும் கன நாட்களாக எழுதவில்லை , தொடர்ந்து எழுதவும் என்று சொன்ன நண்பருக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம் :-))
 
http://aatputhan.blogspot.com/2007/07/blog-post_27.html 
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)