இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா ? Print E-mail
கோவி.கண்ணன்   

சேலம்: தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்ததால், சேலம் மாவட்டம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டனர்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளதாகும்.

ஆனால் கோவிலுக்குள் தலித் சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சமீப காலமாக அவர்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.

*****************

சாதி அமைப்பு முறையால் விளையும் கேடுகளை இந்த சம்பவம் காட்டுகிறது. எந்த சாதிக்காரனாக இருந்தாலும் தான் தாழ்ந்து இருக்கிறோம் என்பதை மறைக்க தனது சாதிக்கு கீழாக ஒரு சாதியை வைத்திருப்பது 20 ஆம் நூற்றாண்டுகளிலும் நடக்கும் கொடுமை.

மாகபாரதத்தில் பேசப்படும் முக்கிய பிரிவு ஒன்று சத்திரியன், சத்திரிய தர்மம். இது பற்றி மிகவிரிவாகவே மகாபராத கதையிலும், பகவத் கீதை கர்மயோகத்திலும் அதிகமாகவே பேசப்படுகிறது. வருண கோட்பாடுகளில் சத்திரியன் என்பவன் வீரத்துக்கு இலக்கணமாக காட்டப்படுகிறான். அரசனாக இருப்பதற்கு அவனே தகுதி படைத்தவனாம். சத்திரியர்களில் எந்த சாதி வருகிறது என்று பார்த்தால். அது வன்னிய இனம் என்பதை வன்னிய குல ஷத்திரியர், படைநடத்தும் ஆட்சியர் அதாவது படையாட்சி என்ற சாதிப்பிரிவே சத்திரியர்களாம்.

இவர்கள் தான் மாகபாரதத்தில் குறிப்பிட்டுள்ள சத்திரியர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த சாதியினர் மிகுந்து இருக்கும் ஊர்களில் திரவுபதி அம்மன் கோவில்கள் இருக்கிறது. போருக்கு முன் அரவாணை பலி இடுதல், அவனுக்காக அரவாணிகள் தாலி அறுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் கூவாகம் வன்னிய சாதி பிரிவினர் நிறைந்துள்ள இடத்தில் அமைத்திருக்கிறது.

மகாபாரதம் என்பதே ஒரு கற்பனை கதை. அந்த கற்பனை கதையில் ஒரு சாதியினர் எப்படி உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று சரியாக வரலாற்று வழியாக தெரியவில்லை. ஆனாலும் அவற்றை மெய்பிக்கும் முயற்சியாக எதோ ஒரு காலத்தில் வன்னிய கிராமங்களில் திரவுபதி அம்மன் கோவில்கள் ஏற்பட்டு இருக்கும் என கருதுகிறேன்.

எது எப்படியோ...கோவில்களில் வணங்கும் உரிமையை கேட்டு வரும் தலித்துக்களை வன்னியர்கள் தடுப்பது வருணத்தை இவர்கள் தாங்கிப் பிடிப்பதாகவே நினைக்க முடிகிறது. தமிழர், தமிழ், தமிழ் தேசியம் என்று பேசும் பாமகவினர் தலித்துக்களை தமிழர்களாக பார்க்கவில்லை போலும்.

ஒரே மேடையிலும், ஒரே பந்தியிலும் சாப்பிடுகிறோம் என்று மருத்துவர் இராமதாஸ் ஐயா மேடையில் இடிமுழக்கம் செய்வதையும், மேற்கண்ட கோவில் கதவடைப்பு நிகழ்வையும் பார்த்தால், இராமதாஸ் அவர்களின் மேடை பேச்சு பொருளற்றதாகவே தெரிகிறது.

தலித்துக்களை அரவணைக்காத தமிழ் தேசியம் யாருக்கு வேண்டும் ?

இராமதாஸ் ஐயாவும், பாமகவும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழர் ஒற்றுமைக்கு வழிவகுப்பார்களா ?

வன்னியர் வாழும் பகுதிகளில் தலித்துக்களின் ஓட்டுக்களுக்காக ஓட்டுப் பெட்டி மட்டும் திறந்திருந்தால் போதாது. தலித் மக்களின் நுழைவுக்கு திரவுபதி அம்மன் கோவில் கதவுகளும் திறக்க வேண்டும்.


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

http://govikannan.blogspot.com/2007/08/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)