இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
செவ்வி-எஸ்.பி.உதயகுமார் Print E-mail
ஆசிரியர் குழு   

பன்னாட்டு அரசியல் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் மக்கள் வாழ்வுரிமைகளைக் காக்கும் களப் போராளி என பன்முகங்களைக் கொண்ட முனைவர் எஸ். பி. உதயக்குமார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தெற்காசிய சமூக மையம், ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப் போனால் SACCER (South Asian Community Center for Education and Research) என்ற நிறுவனத்தை நாகர் கோயிலில் ஏற்படுத்தி அதன் மூலம் தன் பணிகளைச் செய்து வருகிறார். உதயக்குமாரின் அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகெங்கும் பல்கலைக் கழகங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக் கழகங்களில் பன்னாட்டு அரசியல் குறித்து கோடைக் கால வகுப்புகள் எடுக்க ஆண்டு தோறும் வருகை தரும் பேராசிரியராக அழைக்கப் படுகிறார்.

 

தற்பொழுது இந்தியாவில் இருந்து கொண்டே ஓஹையோ மாநிலப்பல்கலைக்கழகத்தின் கிர்வான் இனப் படிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவருடைய பணிகள் தொடர்பாகவும், இந்தியாவின் வாழ்வியல் பிரச்னைகள் குறித்தும் பல பத்திரிகைக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக இந்திய அரசின் அணு ஆயுதம் மற்றும் அணுமின்சாரக் கொள்கைகளை விமர்சனம் செய்து வரும் உதயக்குமார் கூடங்கூளம் அணுமின் நிலையத்துக்கெதிராக வெகுமக்கள் போராட்டத்தை முன் நின்று நடத்தி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் கடல் வாழ் உயிரினங்களின் ஏற்படுத்தப் போகும் சுற்றுப் புறச் சூழல் கேடுகளைக் கருதி, அத்திட்டத்தை விமர்சித்து வருகிறார். இவரும் இவர் மனைவி மீராவும் நாகர்கோயிலுக்கருகில் கிராமப் புறத்துக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவதற்கு நல்ல பள்ளிக் கூடம் ஒன்றை நிறுவி நடத்தி வருகின்றனர். ஆழிப் பேரலைகள் குமரி மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கியழித்தபோது அம்மக்களிடையே அரும்பணியாற்றியவர். தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களுக்காக நல்ல திட்டங்களையும் பயிற்சிகளையும் உருவாக்கி நடத்தி வருகிறார். பூங்காவிற்காக உதயக்குமார் அளித்த நேர்காணலை இங்கு அளிக்கிறோம் 

 

  

 

 

 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)