|
பகவத் கீதை போர்களத்தில் உபதேசிக்கப்பட்டதா ? |
|
|
|
கோவி.கண்ணன்
|
பகவத் கீதையைப் பற்றி குறிப்பிடுபவர்கள், அது மகாபாரதக் கதையின் முடிவில் போர்களத்தில் அர்ஜுனன் போர் செய்யத் தயங்கியபோது கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது.
இவை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் 18 அத்தியாயங்கள் வரை நீளும் பகவத் கீதையை உரைத்து முடிக்க கிருஷ்ணனுக்கு போர்களத்தில் போதிய அவகாசம் கிடைத்திருக்குமா ? அதில் உள்ள சுலோகங்களை படித்து முடிக்கவே குறைந்தது 3 நாள்களாவது அல்லது அதற்கும் மேல் ஆகும் என்று நினைக்க முடிகிறது.
இரண்டுபக்கமும் படைகள் அணிவகுத்து நின்ற போது 2 - 3 நாட்கள் கிருஷ்ணன் தொடர்ச்சியாக உபதேசம் செய்துவந்திருந்தால் அங்கு நின்ற மற்ற வீரர்களும், கவுரபடை, பாண்டவப்படை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
தெரிந்தவர்கள் விளக்கலாம்.
நான் சில நூல்களில் படித்தபோது பகவத் கீதை மகாபரதத்தின் இடை சொருகல் என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். மேலும் முழு பகவத்கீதையும் ஒரே காலகட்டத்தில் உருவானவை அல்லவென்றும், வேறு வேறு காலகட்டத்தில் எழுதிய சுலோகங்களின் தொகுப்பாக இருக்கிறது என்றும் அதற்கான காரணங்களாக கர்மயோகமும் பக்தியோகமும் முரண்பட்டு இருப்பதையும், செய்யுள் நடையில் வேறுபாடுகள் இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
எல்லாம் மாயை என்று சொல்லும் பக்தியோகம் மற்றும் ஞானயோகம், பின்பு ஏன் போர் செய்வதை கர்மயோகத்தில் கடமை என்று சொல்கிறது என்று ஞாயமான கேள்வி எழுப்புகிறார்கள். மாயை என்று சொல்லிவிட்டால் அங்கு செயல்பாடுகள் அர்த்தமற்றுப் போகிறது. பின்பு ஏன் செயலான போரைக் குறித்து ஒரு அத்யாயம் எடுத்துக் கொண்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறார்கள்.
நன்கு தெரிந்தவர்கள் விளக்குங்கள் மற்றவர்கள் கருத்து கூறுங்கள் !
அன்புடன்,
கோவி.கண்ணன்
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_17.html
|