இந்தப் படம் (documentary film) நானும், அப்பாவும், அம்மாவும் பார்த்தம். இந்தப் படம் emperor penguins பற்றின படம்.
அது ஒரு நல்ல படம். பென்குவின்ஸ் எல்லாம் baby பிறக்கிறதுக்குக் கன தூரம் நடந்து நடந்து போகினம். நிறைய தூரம் நடக்கினம். அங்க போய், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு partner தேடி பிடிச்சு family ஆகிட்டினம்.
பிறகு அம்மாக்கு முட்டை வந்தது. அவையள் நிறைய நாள் சாப்பிடாமல் இருந்தவை. அங்க நல்ல குளிரும் இருந்தது. பிறகு முட்டையை அப்பாட்ட குடுத்துட்டு, அம்மா எல்லாம் சாப்பிட போயிட்டினம். சாப்பிடுறதுக்கு திருப்பியும் நிறைய தூரம் நடந்து நடந்து போனவை. அப்பா எல்லாரும் முட்டையையும் வைச்சுக் கொண்டு நல்ல குளிருக்குள்ள நிக்கினம். பாவமாயிருந்தது.
அப்பாட்டை இருகேக்கை முட்டை பொரிஞ்சுட்டுது. அந்த குஞ்சுக்கு அப்பா வாயில இருந்து ஏதோ சாப்பாடு கொடுத்தார். பிறகு கொஞ்ச நாளில அம்மா எல்லோரும் திரும்பி வந்தவை. குஞ்சு அம்மாட்டை போய் வாயில இருந்து பால் வாங்கி குடிச்சுது. பிறகு குஞ்சை அம்மாக்களோட விட்டுட்டு, அப்பா எல்லாரும் சாப்பிட நடந்து போயிட்டினம். அவையளும் திருப்பி நிறைய தூரம் நடந்து நடந்து போகினம்.
சில குஞ்சு குளிரில செத்துப் போச்சுது. செத்துப்போன குஞ்சோட அம்மா பாவம். வேற அம்மாட்டை இருந்து மற்ற குஞ்சை பறிக்க பார்த்தது. ஆனால் அந்த அம்மா குடுக்கேல்லை. சில குஞ்சை eagle உம் வந்து கொத்திச்சுது. பாவம் குஞ்சு.
பிறகு அப்பாவும், அம்மாவும் மாத்தி மாத்தி குஞ்சை பார்த்துக் கொண்டினம். மாத்தி மாத்தி சாப்பிடப் போச்சினம். ஒவ்வொரு முறையும் நிறைய தூரமாக நடந்து நடந்து போகினம்.
கடைசியில அந்த குஞ்சு எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்பா, அம்மா எல்லாருமே போயிட்டாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. அந்த குஞ்சுகள் எல்லாம் பாவம்தானே? அவையளுக்கு தனியா இருக்க பயமா இருக்கும்தானே? அவையள் தனிய போனால், seal எல்லாம் பிடிச்சு சாப்பிட்டுடும்தானே? அவையளுக்கு seal இட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதெண்டு தெரியாதுதானே? நான் அழத் தொடங்கி விட்டன். பிறகு அம்மாவும், அப்பாவும் சொன்னாங்க, அவங்களாவே எப்படி தப்பிக்கிறதெண்டு பழகிடுவாங்க எண்டு. பிறகு பார்த்தால், ஒருதரும் சொல்லிக் குடுக்காமலே அந்த குஞ்சுகள் எல்லாம் தாங்களாவே தண்ணியில போய் splash splash என்று அடிச்சுக் கொண்டு, நீந்தி நீந்தி போனாங்க. அது பார்க்க நல்ல வடிவாயிருந்தது.
http://anjalisplace.blogspot.com/2006/09/march-of-penguins.html
|