இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பயர்பாக்ஸும் தமிழும் Print E-mail
வலைஞன்   

இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலையுலாவியாக இருந்தாலும் புதிய இணைய அலங்காரங்கள் உள்ள பக்கங்களில் தமிழ் போன்ற மொழிகளை குறிப்பாக யூனிகோடு எழுத்துருக்களை சரியாகக் காண முடிவதில்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக இருந்து வருகிறது.

வலைப்பதிவுகளில் இன்று பல புதிய வடிவமைப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியில் அழகாகக் காண முடிகிற அளவுக்கு பயர்பாக்ஸ்சில் காண முடிவதில்லை. ஆனாலும் அதன் பிற பயன்பாடுகள் அதை சிறந்த உலவியாக நிலைநிறுத்துகின்றன. ஆனால் மொழியைச் சரியாகக் காட்ட முடிவதில்லை என்பது பெரிய குறைதானே?

இதற்கு என்ன மாற்று என்று சிந்திக்கும்போது இப்போது பத்மா என்ற இணைப்பு நீட்சி இதற்கு தீர்வாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இதிலும் சில குறைபாடுகள் சொல்லப் படுகிறது.

அதேசமயம் அனைத்து பிரச்சினைகளும் வலைப்பக்க நிரல்களால் உருவாவதால் அதே நிரல்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

முதலாவதாக பல வலைப்பதிவுகளில் தலைப்புப்பகுதி எழுத்துக்கள் இழைபிரிந்து நிற்கின்றன. இதற்குக் காரணமாக அமைவது letter-spacing என்ற பண்பை style sheet எனப்படும் அலங்கரிப்பு/வடிவ சீரமைப்பு நிரலில் இணைப்பது தான். எனவே இந்த வரியை/நீக்கி விடுவதன் மூலம் இயல்பான எழுத்து இடைவெளியை உலாவிகள் உணர்ந்து கொள்ளும். சில இடங்களில் line-space என்ற பண்பும் பிரச்சினை செய்யலாம். அதையும் நீக்கி சோதிக்கலாம். ஆனால் சில வலைவடிவமைப்புகளில் important என்று குறிப்பிட்டு மேற்கண்ட letter-spacing பண்பை வைத்திருப்பார்கள் அதில் மாற்றம் செய்தால் பக்க அமைப்பில் குளறுபடிகள் நேரலாம். அதைச் சற்று நிதானமாகச் சோதித்து வேறு மாற்றங்களையும் செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக மற்றும் முக்கியமாக text-align:justify என்ற பண்பை பயன்படுத்தும்போது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் பக்கம் அழகு பெறுகிறது. அதேசமயம் பயர்பாக்ஸ்சில் எல்லா எழுத்துக்களும் கலைந்து குப்பையாகி விடும். இதற்கு ஒரு எளிய நிரலை style sheet-ல் இணைப்பதின் மூலம் தீர்வு காணலாம்.

முதலில் text-align:justify என்ற பண்பு style sheet இல் எங்கெங்கு காணப்படுகிறதோ அவற்றை நீக்கி விட வேண்டும். அடுத்து பின்வரும் நிரலை style sheet -ன் ஆரம்பத்தில் இணைக்க வேண்டும்.
----------------
body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
----------------
இதன் மூலம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் text-align:justify செயல்படவும் பயர்பாக்ஸ்சில் பழையபடி text-align:left ஆகவும் இருப்பதால் எழுத்துக்கள் சரியாக வெளிப்படுகின்றன.

இவை முன்பு பயர்பாக்ஸ் பற்றிய விவாதங்கள் நடைபெற்ற போது நண்பர்களால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளில் மிக எளிமையானவையும் வெற்றிகரமானவையுமாக என்னால் சோதித்தறியப் பட்டவை.

இந்த மாற்றங்கள் நான் வெற்றிகரமாக என் வலைப்திவுகளில் பயன்படுத்தி செயல்படுத்தியவை. எனவே நிச்சயமாக இவை பயன்தரும்.

நீங்களும் முயன்று பாருங்கள். 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)