இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சிவப்புநாடா குற்றங்கள்... Print E-mail
சிந்தாநதி   

என் மனம், அலை பாயுதே...: நேர்மை ( சிலசமயம் கஷ்ட்ட்ட்ட்டப்பட்டு) வெல்லும்.. | கடல் கணேசன் தன் பதிவில் ஊழலும் சிவப்புநாடா குற்றங்களும் பற்றி எழுதியிருந்ததைப் படித்த போது எனக்கே நடந்த ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது.

(கிராமப்புற பிறப்புப் பதிவு செய்யும் அலுவலகங்களில் இருந்து பிறப்பு இறப்புப் பதிவேடு மறுவருடம் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப் படும். பின்னும் இரு வருடங்கள் கழித்து அது பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விடும். முதல் வருடம் கிராம பதிவு அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்காதவர்கள் அடுத்து தாலுகா அலுவலகத்திலும் மூன்றாம் வருடத்திற்குப் பிறகு நிரந்தரமாக பதிவாளர் அலுவலகத்திலும் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும்.)

முதல் வருடம் பிறப்புச்சான்றிதழ் வாங்காததால் என் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டி விண்ணப்பம் கொடுக்க தாலுகா அலுவலகத்துக்கு என் மனைவி சென்ற போது அங்கிருந்த ஊழியர் (ஒரு பெண்மணி) அதை வாங்காமல் அந்தப் பெட்டியில் போட்டு விட்டுப் போ என்று கூறியிருக்கிறார். காரணம் கேட்ட போது அது அப்படித்தான் ஒரு வாரம் கழித்து வா என்று மறுபடி மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த போது வேறொருவர் என் மனைவியிடம் ஒரு நூறு ரூபாய் கொடுங்கள் உடனே சான்றிதழை வாங்கி விடலாம் என்றிருக்கிறார். அப்போது தான் புரிந்தது இடைத்தரகர்கள் இல்லாமல் அங்கே எதுவும் நடக்காது என்று. இதுவே பள்ளித் திறப்பு சமயம் என்றால் தொகை 500 வரை போகுமாம். சான்றிதழ் வகையைப் பொறுத்து 100 முதல் 500, 1000 என மாறுபடும்.

என் மனைவி உடனே அங்கிருந்து எனக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினார். அவரை அங்கேயே இருக்கும் படி சொல்லி விட்டு முதலில் நான் அந்த சான்றிதழைத் தர வேண்டிய துணை வட்டாட்சியரை போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அவரோ எடுத்த எடுப்பிலேயே 'போனிலெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது நேரில் வரணும்' என்றார். பிறகு யோசித்து நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு ஆட்சியரின் முதன்மைச் செயலருடன் பேசினேன். 'பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்த பிறகு கால இடைவெளி எதுவும் உண்டா?' என்று தான் முதலில் கேட்டேன்.
அவர் 'அப்படி எதுவும் இல்லை. வேலை அதிகம் இருந்தால் அன்றைக்கு பதிலாக அடுத்த நாள் கிடைக்கலாம்'. என்றார்.

நான் நடந்ததைக் கூற அவர் விவரங்களைக் கேட்டுக் கொண்டு தான் அதிகாரியிடம் பேசுவதாகவும் அரை மணி நேரம் கழித்து அங்கே போகுமாறும் சொன்னார்.

அப்படியே அவர் அரைமணி நேரம் கழித்து போனபோது முறைப்புடன் விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்து 'இந்த பைலெல்லாம் தேடணும். (முந்திய வருடத்து பைல்!) நாளைக்கு வாங்க' என்றிருக்கிறார். ஒரு வாரம் என்பது மறுநாளாக குறைந்த திருப்தியில் மனைவி திரும்பி விட்டார்.

மறுநாள் சான்றிதழ் கிடைத்தது மட்டுமல்ல அது முன் தினமே கையொப்பமிடப் பட்டிருந்தது. சும்மாவானும் ஒருநாள் அலைக்கழிக்க நினைத்தார் அவ்வளவுதான். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் லஞ்ச அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரம் லஞ்சம் பெற முடியாத தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

 http://valai.blogspirit.com/archive/2006/11/15/சிவப்புநாடா-குற்றங்கள்.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)