|
மா.சிவக்குமார்
|
போட்டிச் சந்தையில் அரசு தலையிடக் கூடாது இன்று வைக்கப்படும் வாதங்கள் எல்லாம் பொருந்துவது விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருவாரியாக இருந்து எந்த ஒருவரும் சந்தை விலையை மாற்றி விட முடியாத ஒரு சில துறைகளில் மட்டுமே. காய்கறிகள்/பழங்கள், தனிமனிதர் சேவைகள் போன்ற சந்தைகளில் மட்டுமே இந்தக் கோட்பாடுகள் செல்லுபடியாகும்.
போட்டிச் சந்தை எப்படி இருக்கும்?
-
எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்வார்கள்.
-
ஒரு விற்பனையாளரின் உற்பத்தி கூடுவதாலோ குறைவதாலோ அவரைப் பொறுத்த வரை சந்தையின் தேவை மாறி விடப் போவதில்லை.
-
இப்படி எல்லோருமே அதிகம் உற்பத்தி செய்தால் விலை சரிந்து விடும் என்பது இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையோ அதைப் புரிந்து கொள்ளும் திறனோ யாருக்கும் இருக்காது.
-
அதனால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வருவதுதான் விற்பனையாளருக்கு இருக்கும் ஒரே ஆதாயம் அதிகரிக்கும் வழி.
-
ஒவ்வொரு அலகு அதிக விற்பனையும் சந்தை விலையை ஈட்ட முடிவதால், அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவு விலையை விடக் குறைவாக இருக்கும் வரை உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போகலாம்.
-
சந்தை விலையும் கடைசி அலகின் உற்பத்திச் செலவும் சமமாக இருக்கும் நிலையில்தான் ஒவ்வொரு விற்பனையாளரின் உற்பத்தியும் அமையும்.
இப்படி எல்லோரும் தன்னிச்சையாகச் செயல்படும் போது ஒரு சில உற்பத்தியாளர்களின் ஒரு அலகு உற்பத்தி செய்ய் ஆகும் செலவை
விட சந்தை விலை சரிந்து விட்டால், அவர்கள் தமது உற்பத்தியை நிறுத்தி இழப்பை தவிர்ப்பார்கள். விற்கும் விலை அளவைப் பொறுத்து மாறும் செலவுகளை மட்டுமாவது சரிக்கட்டுவது வரை உற்பத்தியும் விற்பனையும் தொடரலாம். அந்தப் புள்ளிக்குப் பிறகு தொழிலை விட்டு விடுவதுதான் இழப்பைத் தவிர்க்கும் ஒரே வழி.
-
உற்பத்தி அளவைப் பொறுத்து மாறாத செலவுகள் முழுமையாக ஈடு கட்டப்படா விட்டாலும் ஒரு விற்பனையாளர் தொடர்ந்து தொழில் செய்யலாம். மாறாச் செலவுகளில் ஒரு பகுதியாவது தேறினால் இழப்பில் கூட விற்பனை நடக்கும். இது உடனடிக் காலத்தில்.
-
இப்படியே பல நாட்கள் போனால் மாறாச் செலவுகளையும் குறைக்க முயற்சிகள் செய்து விற்பனையை நிறுத்தி விடுவார்.
குறுகிய காலத்தில் விலை மாறினாலும் சந்தைக்கு வரும் பொருட்களின் அளவு சரியான வீதத்தில் மாறி விடுவதில்லை. மாறாச் செலவுகளையும் மாற்ற முடியும் நீண்ட காலப் போக்கில்தான் விலை மாற்றத்தின் முழுத் தாக்கமும் நடைமுறைக்கு வரும்.
http://masivakumar.blogspot.com/2006/09/economics-20.html
|