இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஒரு காசில்லாத பிள்ளை!! Print E-mail
அஞ்சலி   

ஒரு காசில்லாத பிள்ளை!!

('ஒரு ஏழைச் சிறுமி!!' என்பதைத்தான் அஞ்சலி தன்னுடைய தமிழில் சொல்லியிருக்கிறா)

இந்தியாவில, ஒரு சின்ன ஊரில ஒரு பிள்ளை இருந்தா. அவவுக்கு பேர் மாலா. அவவுக்கு ஸ்கூலுக்கு போகேக்கை ஒருநாள் ஒரு மியூசிக் காதில கேட்டுது. அது நல்லா இருந்துது. அவவுக்கு அந்த மியூசிக் எந்த instrument ல இருந்து வருதெண்டு தெரியேல்லை. அவ அந்த சத்தம் வந்த இடத்துக்கு போனா. அங்க அந்த சத்தம் ஒரு ரேடியோவில இருந்து வந்தது. அவ அங்க இருந்த lady யிட்ட, இது என்ன instrument என்று கேட்டா. அவ சொன்னா, 'இது வீணை' எண்டு.

மாலாவுக்கு அந்த வீணை வாசிச்சு பழகவேணும் என்று ஆசையாயிருந்தது. அவ அந்த லேடியிட்ட கேட்டா, "உங்களுக்கு இது சொல்லித் தாற டீச்சர் தெரியுமா?" என்று. அவ தனக்குத் தெரியாது என்று சொல்லிட்டா. அதுக்குப் பிறகு மாலா வீட்டுக்குப் போய், அம்மா, அப்பாட்ட கேட்டா "நான் வீணை பழகலாமா?" எண்டு. அதுக்கு அம்மாப்பா சொல்லிச்சினம் "நீங்க கட்டாயம் பழகலாம். ஆனால் எங்களிட்ட வீணை வாங்க காசில்லை" எண்டு.

அதுக்குப் பிறகு மாலா வீணை பழக்கிற ஒரு டீச்சரை கண்டு பிடிச்சிட்டா. அப்பா, அம்மாவோட போய் அந்த டீச்சரிட்டை "நான் வீணை பழகலாமா?" என்று கேட்டா. அதுக்கு டீச்சர் "அதுக்கு முதலில நீங்க ஒரு வீணை வாங்க வேணும்" என்று சொன்னா. மாலா தன்னட்டை காசில்லை எண்டு சொன்னா. அப்ப டீச்சர் சொன்னா "அப்பிடியெண்டா நீங்க என்ரை வீட்டுக்கு வந்து பழகுங்கோ. நான் உங்களுக்கு என்ரை வீணையில சொல்லித்தாறன்" எண்டு.

மாலாவுக்கு நல்ல சந்தோஷம். அவ நல்லா வீணை எல்லாம் பழகி, நல்லா வாசிக்க பழகிட்டா. பிறகு ஒருநாள் ஸ்கூலில ஒரு ப்ரோக்ராம் வைச்சாங்க. அதில மாலா வீணை வாசிச்சா. அதை ஒரு பணக்காரனும் இருந்து கேட்டார்.

பிறகு ஒருநாள் அந்தப் பணக்காரன் மாலா வீட்டுக்கு வந்து அவையளோட கதைச்சார். "நீங்க நல்லா வீணை வாசிக்கிறீங்க. நீங்க ஒருநாளைக்கு வீணையில queen ஆகுவீங்க." எண்டு மாலாவுக்கு சொன்னார். மாலா அதுக்கு, "தாங்க்ஸ். ஆனால் எனக்கு நல்லா வீட்டுல ப்ரக்டீஸ் பண்ண வீணை வாங்க காசில்லை" எண்டு சொன்னா. அவர் அதுக்கு நான் ஹெல்ப் பண்ணலாம் என்று சொல்லி விட்டு போனார்.

பிறகு ஒருநாள் மாலாவுக்கு Post office ல இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதுல 'உங்களுக்கு ஒரு பெரிய parcel வந்திருக்கு. அதை soon as possible வந்து எடுங்க.' எண்டு இருந்தது. மாலாவும் என்னவா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே அங்க போய் parcel எடுத்தா. அது நல்ல பெரிசா இருந்தது. அதை திறந்து பார்த்தால், அதுக்குள்ள நல்ல வடிவான ஒரு பெரிய வீணை இருந்தது. அவவுக்கு நல்ல சந்தோஷம்.

அதுக்குப் பிறகு அவ நல்லா வீணை பழகி, இந்தியாவிலேயே நல்ல famous ஆ வந்திட்டா


orukaasillatha 

 

 

 

 

 

 

 

 

http://anjalisplace.blogspot.com/2006/11/blog-post_30.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)