இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பொய்!! Print E-mail
அஞ்சலி   

எண்ட அப்பாவுக்கு பிறந்தநாள் வந்தது.  அதுக்கு என்ன present வாங்கிக் குடுக்கலாம் எண்டு அம்மாவும் நானும் யோசிச்சம். நாங்க present வாங்குறத அப்பாவுக்குச் சொல்லாமல் surprise ஆ வைச்சிருக்கலாம் எண்டு யோசிச்சம். அதுக்கு அப்பாவை விட்டுட்டு கடைக்குப் போக வேணும். எப்படி அப்பாவுக்குத் தெரியாமல் போறது.

அம்மாவும் நானும் கதைச்சு வைச்சு, அப்பாட பிறந்தநாள் வர கொஞ்ச நாளைக்கு முதலே, ஒருநாள் நானும் அப்பாவும் தமிழ் ஸ்கூலுக்குப் போன பிறகு, மட்டும் அம்மா கடைக்கு போய் ஒரு Dolphin massager வாங்கி வந்திருந்தா. அதை எனக்கு மட்டும் காட்டினா. அதை ஒளிச்சு வைச்சிட்டு, அப்பாவுக்கு பிறந்தநாள் அண்டைக்கு குடுக்கலாம் எண்டு சொன்னா. ஆனால் எனக்கு அதை அப்பவே கொடுக்க வேணும்போல வந்திட்டுது. அதால அப்பவே, உடனேயே அப்பாட்ட குடுப்பம் எண்டு அம்மாட்ட கேட்டன். அம்மாவும் சரி சொன்னா. அதால அதை அப்பவே அப்பாட்ட குடுத்திட்டன்.

அதால அப்பாவுக்கு இன்னொரு present வாங்கலாம் எண்டு யோசிச்சம். அப்பா குளிருக்கு காலெல்லாம் நோகுது, ஒரு புது shoe வாங்க வேணும் எண்டு சொல்லிக்கொண்டிருந்தார். அதால நாங்க shoe வாங்கி குடுப்பம் எண்டு plan போட்டம். அப்பா என்னை ஸ்கூலில இருந்து கூட்டிக் கொண்டு வாற நேரம், நானும் அப்பாவும் அந்த shoe கடைக்குள்ள போனம். நான் அப்பாட்டை உங்களுக்கு எந்த shoe பிடிச்சிருக்கு எண்டு கேட்டு அறிஞ்சு வைச்சிட்டன்.

பிறகு ஒரு சனிக்கிழமை எனக்கு basketball match இருந்ததால, நான் அண்டைக்கு தமிழ் ஸ்கூலுக்கு போகேல்லை. அப்பா போய்ட்டார். நானும், அம்மாவும் கடைக்குப் போய் அந்த shoe வாங்கலாம் எண்டு போனம். ஆனால் அம்மாக்கு அப்பாட shoe size number மறந்து போச்சு. எனக்கும் மறந்துதான் போச்சுது. அதால அம்மா அப்பாவுக்கு phone பண்ணி shoe size number கேட்டா. அதால இப்ப அப்பா தனக்கு என்ன present வரப்போகுதெண்டு guess பண்ணி இருப்பார்தானே. அதால நாங்க அவருக்கு இன்னுமொரு present வாங்கலாம் எண்டு யோசிச்சம். ஒரு sweater உம் வாங்கினம். ரெண்டையும் நல்ல வடிவான paper ல pack பண்ணி எடுத்தம். பிறகு ரெண்டையும் கொண்டு வந்து எங்க ஒளிச்சு வைக்கலாம் எண்டு அம்மா கேட்டா. நான் சொன்னன் அம்மாவை வேலைக்கு கொண்டுபோய் அங்க ஒளிச்சு வைக்கச் சொல்லி. அம்மா சொன்னா "இதையெல்லாம் அங்க தூக்கிக் கொண்டு போகேலாது. எப்படியோ இனி வேலைக்கு திங்கள்கிழமை போக முதல் எங்கேயாவது ஒளிக்கத்தானே வேணும்." நானும் சரியெண்டு, ரெண்டு பேருமா சேர்ந்து இடம் தேடி ஒளிச்சு வைச்சம்.

பிறகு அப்பா வந்து "என்ன shoe வாங்கியிட்டீங்கள் போல இருக்கு" எண்டு கேட்டார். நாங்க "இல்லை, நாங்க வாங்கேல்லை. Shoe பாத்தம்தான். ஆனால் அந்த size இல்லை, அதால வாங்கேல்லை எண்டு சொல்லியிட்டம்". அதுக்கு அப்பா, "நீங்க வாங்கியிட்டீங்க போலதான் இருக்கு. அதுதான் சிரிச்சுக் கொண்டு சொல்லுறீங்க" எண்டு சொன்னார். நான் நினைச்சன், அப்பா shoe வை guess பண்ணினாலும், sweater ஐ guess பண்ண மாட்டார். அதால எப்படியும் அப்பாவுக்கு surprise ஆ இருக்கும்.

பிறகு நாலுநாள், ஒருமாதிரி கஷ்டப்பட்டு அப்பாவுக்கு present ஐ சொல்லாமல் இருந்திட்டன். அப்பாட பிறந்தநாளுக்கு முதல்நாள் எனக்கு நல்ல exciting ஆ இருந்தது. அப்பாவுக்கு ஒரு Birthday card செய்தன். ஆனாலும், அப்பாவுக்கு இவ்வளவு நாளும் பொய் சொல்லிட்டேனோ என்று கொஞ்சம் கவலையாயும் இருந்தது. அதால Birthday card ல "We are sorry that we lied. Happy Birthday to appa." என்று எழுதி, அதுல நிறைய baloons படம் எல்லாம் கீறி, அதையும் ஒளிச்சு வைச்சிட்டன்.

அடுத்தநாள், காலையில வெள்ளண எழும்பிட்டன். அப்பாவுக்கு ரெண்டு presents உம் எடுத்து கொடுத்தன். அப்பா உண்மையிலயே ரெண்டாவது present க்கு surprise ஆகிட்டார். எனக்கு நிறைய்ய்ய்ய்ய kiss எல்லாம் தந்தார். எனக்கு நல்ல சந்தோஷம். அப்பா, அம்மா "We are sorry that we lied" என்று card ல எழுதி இருந்ததைப் பார்த்து, "இது பொய்யில்லை குஞ்சு. இதுக்கு கவலைப் பட வேண்டாம். இது அப்பாக்கு surprise குடுக்கிறதுக்காக சொல்லாமல் விட்டதுதானே" எண்டு சொன்னாங்க. ஆனாலும், அப்பா கேக்க கேக்க, நான் "இல்லை, நாங்க உங்களுக்கு ஒண்டுமே வாங்கேல்லை" எண்டு சொன்னது கொஞ்சம் கவலையாத்தான் இருந்தது. நீங்க சொல்லுங்க, இது பொய்யில்லத்தானே????

அப்பாக்கு குடுத்த B'Day card ல அப்பாக்கு ஒரு question கேட்டு answer சொல்லச் சொல்லி இருந்தன். அப்பா answer சொல்லி இருக்கிறார். பாருங்கோ.






 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)