கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மொழிச் சார்ந்த திறன்களை அறிமுகம் செய்யும் முதல் நிலையாக நிலை – 1 இருக்கும். இந்த நிலையின் இறுதியில் மொழியைப் பேசவும், எழுத்துக்களை அறிந்து சிறு சொற்களை வாசிக்கவும் முடியும்.

தமிழ் மொழி குறித்த அறிமுகம் இல்லாத ஐந்து வயது மாணவர்களுக்கு தமிழ் மொழி குறித்த அறிமுகத்துடன் தொடங்கி, கேட்டல், பேசுதல் ஆகிய திறன்களை வளர்த்து படிப்படியாக தமிழ் எழுத்துக்களை வாசிக்கவும், எழுதவும் கூடிய திறன்களை மாணவர்கள் பெறுகிறார்கள்.