தமிழ் மொழி பாடத்திட்டம் என்பது இன்னமும் நாம் கல்வி பயின்ற காலகட்டத்தில் பின்பற்றிய கற்றல் முறைகளைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. அத்தகைய பாடத்திட்டங்களில் உள்ள தரமானவற்றை மட்டும் கொண்டு, இன்றைய நவீனக் காலத்திற்கு ஏற்ப, தற்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்டு எளிமையாக, தரமாக கணினி மென்பொருட்கள் (Software), கைப்பேசி செயலிகள் (Mobile Apps) மூலமாக ஒரு தரமான பாடத்திட்டமாக இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.