Learn From Anywhere

About School

வேலை நிமித்தமாக பெற்றோர்கள் இடம் மாறும் சூழலில், குழந்தைகளின் தமிழ் மொழிக் கல்வி தடைபடும் நிலை பல நேரங்களில் நேர்ந்து விடுகிறது. புதிதாகச் செல்லும் இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் இல்லாமை, தமிழ்ப் பள்ளிகள் இருந்தாலும் புதிய பாடத்திட்டம் என தமிழ் மொழிக் கல்வி சார்ந்த சவால்களுக்கு விடை தரும் வகையில், பூங்கா தமிழ்ப் பள்ளி எந்த இடத்தில் இருந்தும் தொடர்ச்சியாக, தடையில்லாமல், சீராக தமிழ்க் கற்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

நோக்கம்

இணையம் மூலமாகச் சிறப்பான ஒரு தமிழ்க் கல்வியைக் கொடுக்க முடியும் என்பதை கொரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது. அத்தகைய தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து வழங்கவே பூங்கா தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. எந்த இடத்திலிருந்தும் எளிமையாக, தொடர்ச்சியாக, தடையில்லாமல் நம் செம்மொழிக் கல்வியை “பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளி” வழங்கும்.

பாடத்திட்டம்

புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு, காலத்திற்கேற்ப நவீன தமிழ்க் கல்வியை வழங்குவதே பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளியின் நோக்கம். அந்த நோக்கத்திற்கேற்ப புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கல்வியை வழங்கும் அமெரிக்கத் தமிழ் மொழிக் கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டத்தை இணையம் மூலமாக பூங்கா தமிழ்ப் பள்ளி வழங்குகிறது.

ஆண்டு விழா 2025

School Events & News

School News

மாணவர் சேர்க்கை 2025-2026

பூங்கா தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. முழுமையாக இணையம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளாக பூங்கா தமிழ்ப் பள்ளி செயல்படும். தமிழ்க் கல்வி தவிர, தமிழர் பண்பாட்டினை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழர் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகளும், …

Poongaa Students Win National-Level Tamil Spelling Bee for the Second Consecutive Year

வடகரோலினா மாநிலத்தின், இரலே நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா – FeTNA) தமிழ் விழாவில், தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National level Tamil Spelling Bee), தேனீ-2 பிரிவில் வெற்றி பெற்ற எமது பூங்கா தமிழ்ப் …